டபிள்யூபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி - தில்லி கேபிடல்ஸ் அணிகள் இன்றிரவு (பிப்.5) 7.30 மணிக்கு வதோதரா திடலில் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் மோதும் இரு அணிகளின் கேப்டன்கள் ஸ்மிருதி மந்தனா (ஆர்சிபி), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (தில்லி) இருவரும் மிகச் சிறந்த தோழிகளாக இருக்கிறார்கள்.
நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு தில்லி கேபிடல்ஸ் அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது. ஆனால், இன்னும் ஒருமுறைக் கூட கோப்பை வெல்லாதது கவனிக்கதக்கது.
ஆர்சிபி கடந்த 2024 சீசனில் கோப்பை வென்றது. இரண்டாவது கோப்பை வெல்லும் முனைப்பில் அந்த அணியும் இருக்கிறது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் கேப்டனாக முதல்முறை இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார்.
முதலில் சில போட்டிகளில் தோல்வியுற்ற தில்லி அணி கடைசியாக 2 போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடும்போது இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 2018 முதல் நல்ல தோழிகளாக இருந்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நிற்பதாக இருந்தபோது தோழிக்காக ஜெமிமா பிபிஎல் தொடரைப் புறக்கணித்து அவருக்கு ஆறுதலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விடியோ ஒன்றில், “ஜெமிமா நன்றாக விளையாடுவார். நாங்கள் வெற்றி பெறுவோம்” எனக் கூற அதற்கு ஜெமிமா, “கண்டிப்பாக இதில் நாங்கள் இருவரும் இருக்க மாட்டோம்” எனப் பதில் அளித்தார்.
களத்தில் தோழிகளாக இருக்க மாட்டோம் எனக் கூறிய இருவரும் நல்ல அணி கோப்பையை வெல்லும் என்றார்கள். உற்ற தோழிகள் இருவரில் யார் கோப்பையை வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
In the WPL final, Royal Challengers Bangalore and Delhi Capitals will clash tonight (February 5) at 7:30 PM at the Vadodara stadium.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

44 ஆண்டு கோப்பைக் கனவு நிறைவேற்றம்..! யூரோப்பா லீக்கை வென்றது ஆஸ்டன் வில்லா!

சாம்பியன்ஸ் லீக்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்செனல்!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறிய ஆர்சி லென்ஸ்..! கால்பந்து திடலில் குவிந்த ரசிகர்கள்!

யு20 சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதும் இந்தியா!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



