47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டி20 உலகக் கோப்பை: ஹேசில்வுட் விலகல்..! சிக்கலில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியே வேகப் பந்துவீச்சாளர் ஹேசில்வுட் விலகல் குறித்து...

News image
ஹேசில்வுட்- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 5:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியே வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (35 வயது) விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேசில்வுட்டுக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு இன்னும் குணமாகாத காரணத்தினால் அவர் உலகக் கோப்பையில் இருந்து விலகியதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நாளை (பிப்.7) முதல் தொடங்கவுள்ள நிலையில், ஹேசில்வுட் விலகல் ஆஸி. அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மிட்செல் ஸ்டார்க் ஓய்வு, கம்மின்ஸ் விலகிய நிலையில் இவரும் விலகியது அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் யாருமே இல்லாமல் இந்த டி20 உலகக் கோப்பையை ஆஸி. அணி எதிர்கொள்ளவிருக்கிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய தேசிய தேர்வுக்குழு தலைவர் டோனி டோடெமைட் கூறியதாவது:

சூப்பர் 8 போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் வருவாரென்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர் குணமாக இன்னும் காலம் தேவைப்படுகிறது. அவரை அவசரப்படுத்தி விளையாட வைத்தால் அவரது உடல் நலனுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

ஹேசில்வுட்டுக் பதிலாக தற்போதைக்கு யாரையும் அணியில் சேர்க்கப்போவதில்லை. சில போட்டிகளுக்குப் பிறகு தேவையான வீரரை அறிவிப்போம் என்றார்.

நாதன் எல்லீஸ், டிம் டேவிட் குரூப் ஸ்டேஸ் போட்டிகளுக்கு தயாராகுவார்கள் என்றும் முதல் போட்டிக்கு ஆடம் ஸாம்பா விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸி. தனது முதல் போட்டியில் பிப்.11ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.