ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் நாளை (பிப்ரவரி 7) முதல் தொடங்குகிறது. அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது, இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி மாற்று வீரராக அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இணைந்துள்ளார்.
முகமது சிராஜ் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். டி20 போட்டிகளுக்குள் அவரை மீண்டும் கொண்டு வருவது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று கூறலாம்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Event Technical Committee of the ICC Men’s T20 World Cup 2026 has approved Mohammad Siraj as a replacement for Harshit Rana in the India squad.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை ஸ்குவாஷ் வீரா்களுக்கு தேவையான உதவிகள்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 22 போ் இந்திய அணி மியுனிச் பயணம்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




