19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அதிவேக சதம் விளாசிய இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி 45 ஓவர்களில் 350 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 55 பந்துகளில் சதம் விளாசி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்ஸக் 51 பந்துகளில் சதம் விளாசியதே உலகக் கோப்பைத் தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக முதலிடத்தில் உள்ளது.
அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழையைப் பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, இந்தப் போட்டியில் மட்டும் 15 சிக்ஸர்களை விளாசினார். மேலும், 15 பவுண்டரிகளையும் அவர் அடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 175 ரன்கள் எடுத்ததன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனைக்கும் சூர்யவன்ஷி சொந்தக்காரராகியுள்ளார். இதற்கு முன்பாக, இங்கிலாந்து வீரர் பென் மேஸ் 98 பந்துகளில் 150 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிவேகமானதாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இன்றையப் போட்டியில் அவர் 15 சிக்ஸர்கள் விளாசினார். இதற்கு முன்பாக, உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹில் 12 சிக்ஸர்கள் விளாசியதே ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. அந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் 14 சிக்ஸர்கள் விளாசியிருந்த சூர்யவன்ஷி, அவரது சொந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷியின் வயது 14 என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Vaibhav Suryavanshi has created a historical record as the youngest player to score the fastest century in the Under-19 World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!

இந்திய அணியால் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்: தலைமைப் பயிற்சியாளர்
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அழுத்தத்தில் வைத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி: அனில் கும்ப்ளே
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




