முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை வேகப் பந்துவீச்சாளர் விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா காயம் காரணமாக விலகியுள்ளார்.

படம் | ஐசிசி

Published On :

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இன்று (பிப்ரவரி 7) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் நாளான இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே திடலில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

கொழும்புவில் நாளை (பிப்ரவரி 8) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

ஈஷன் மலிங்கா விலகல்

தனது முதல் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக விலகியுள்ள அவருக்குப் பதிலாக பிரமோத் மதுஷன் மாற்று வீரராக இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிதவேகப் பந்துவீச்சாளரான பிரமோத் மதுஷன் இலங்கை அணிக்காக இதுவரை 13 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, ஈஷன் மலிங்காவுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Sri Lankan fast bowler Eshan Malinga has withdrawn from the T20 World Cup tournament due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.