டி20 உலகக் கோப்பை 2-ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் அசத்தலாக பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 182 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹெட்மயர் 64 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் 42 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் அசத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ரொமாரியோ ஷெப்பர்ட் 5 விக்கெட்டுகளும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இந்த வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 புள்ளிகளுடன் கூடுதலாக +1.750 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
5 விக்கெட்டுகள் வீழ்த்திய ரொமாரியோ ஷெப்பர்ட்டுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்காமல் ஹெட்மயருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் ரொமாரியோ ஷெப்பர்ட்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
West Indies won by 35 runs and hetmayer player of the match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-வது முறை சாம்பியன்!

டி20 உலகக் கோப்பை: வெளியேறியது இந்திய அணி; அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா!

ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம் விளாசல்; அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

டி20 உலகக் கோப்பை: வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா பேட்டிங்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




