டி20 உலகக் கோப்பை: மார்க்ரம் அரைசதம் விளாசல்; கனடாவுக்கு 214 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கனடாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் எடுத்துள்ளது.
Aiden Markram
அய்டன் மார்க்ரம்படம் | AP
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கனடாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் எடுத்தது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் கனடா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது.

மார்க்ரம் அரைசதம்; கனடாவுக்கு 214 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அய்டன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 32 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேவிட் மில்லர் 39 ரன்களும் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களும் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். ரியான் ரிக்கல்டான் 33 ரன்கள், குயிண்டன் டி காக் 25 ரன்கள் எடுத்தனர்.

கனடா தரப்பில் அன்ஷ் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்பிரீத் பஜ்வா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கனடா அணி விளையாடி வருகிறது.

Summary

In the T20 World Cup match against Canada, South Africa, batting first, scored 213 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com