ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட் அதிரடி; விக்கெட் இழப்பின்றி நியூசி. அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட் அதிரடி; விக்கெட் இழப்பின்றி நியூசி. அபார வெற்றி!
படம் | AP
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம் விளாசல்; 174 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் முகமது வாசிம் மற்றும் அலிஷான் ஷராஃபு அரைசதம் விளாசி அசத்தினர். முகமது வாசிம் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அலிஷான் ஷராஃபு 47 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மயங்க் குமார் 21 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேக்கோப் டஃபி, லாக்கி பெர்குசன், மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளன் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் அசத்தல்!

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 15.2 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் களமிறங்கினர். இந்த இண அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் ஐக்கிய அரபு அமீரகம் திணறியது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். ஃபின் ஆலன் 50 பந்துகளில் 84 ரன்களும் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) , டிம் செய்ஃபெர்ட் 42 பந்துகளில் 89 ரன்களும் (12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று குரூப் டி பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

New Zealand won the T20 World Cup match against the United Arab Emirates by 10 wickets.

ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட் அதிரடி; விக்கெட் இழப்பின்றி நியூசி. அபார வெற்றி!
டி20 உலகக் கோப்பை: மீண்டும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்க காத்திருக்கிறதா அமெரிக்கா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com