டி20 உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 174 ரன்கள் இலக்கு!
படம் | AP

டி20 உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 174 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 173 ரன்கள் எடுத்துள்ளது.
Published on

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 173 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்று வரும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம் விளாசல்; 174 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் முகமது வாசிம் மற்றும் அலிஷான் ஷராஃபு அரைசதம் விளாசி அசத்தினர். முகமது வாசிம் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அலிஷான் ஷராஃபு 47 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மயங்க் குமார் 21 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேக்கோப் டஃபி, லாக்கி பெர்குசன், மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளன் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

Summary

Batting first against New Zealand in the T20 World Cup, the United Arab Emirates scored 173 runs.

டி20 உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 174 ரன்கள் இலக்கு!
பந்துவீச்சு, பேட்டிங்கில் அசத்திய பாஸ் டி லீட்; நமீபியாவை வீழ்த்திய நெதர்லாந்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com