12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சித்திக் 5 விக்கெட்டுகள்: யுஎஇ அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கனடா!

டி20 உலகக் கோப்பையின் 20-ஆவது போட்டி குறித்து...

United Arab Emirates' Junaid Siddique, on ground, celebrates the wicket of Canada's Saad Bin Zafar during the T20 World Cup cricket match between Canada and United Arab Emirates in New Delhi, India, Friday, Feb. 13, 2026. (AP Photo/Manish Swarup)

அரைசதம் அடித்த கனடா வீரர், 5 விக்கெட்டுகள் எடுத்த யுஎஇ வீரர். - படங்கள்: ஏபி

Published On :

டி20 உலகக் கோப்பையின் 20-ஆவது போட்டியில் கனடா அணி 20 ஓவர்களில் 150/7 ரன்கள் எடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அணியின் ஜுனைத் சித்திக் அபாரமாக பந்துவிசீ 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்த அணியின் அதிகபட்சமாக ஹர்ஷ் தகேர் 50 ரன்கள், நவ்னீத் தலிவால் 35 ரன்கள் எடுத்தார்கள்.

5 விக்கெட்டுகளை எடுத்து ஃபிட்சுக்கு முத்தமிட்ட சித்திக்.

5 விக்கெட்டுகளை எடுத்து ஃபிட்சுக்கு முத்தமிட்ட சித்திக். - படம்: ஏபி

ஐக்கிய அரபு அமீரக அணியின் சார்பாக ஜுனைத் சித்திக் அபாரமாக பந்துவிசீ 5 விக்கெட்டுகளை எடுத்து ஃபிட்சுக்கு முத்தமிட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.

குரூப் டி பிரிவில் ஏற்கெனவே, நியூசிலந்து தென்னாப்ப்ரிக்க அணிகள் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் முனைப்பில் இருக்கையில் கனடாவும் யுஎஇ அணியும் தங்களது முதல் வெற்றிக்குப் போராடி வருகின்றன.

குரூப் டி பிரிவில் ஆப்கன், கனடா, யுஎஇ அணிகள் இன்னமும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாதது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா உடன் ஆப்கன் இரண்டு சூப்பர் ஓவர் வரைச் சென்று, கடைசி பந்தில் தோல்வியுற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Summary

In the 20th match of the T20 World Cup, Canada scored 150/7 in 20 overs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.