

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 24-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. அதன் வெற்றியில் கேப்டன் மார்க்ரம், பௌலர் மார்கோ ஜேன்ஸன் முக்கிய பங்கு வகித்தனர்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பெüலிங்கை தேர்வு செய்ய நியூஸிலாந்து தரப்பில் டிம் சைஃபெர்ட்-ஃபின் ஆலன் தொடக்க பேட்டர்களாக களம் கண்டனர் .
சைஃபெர்ட் 13 ரன்களுடன் ஜேன்ஸன் பந்தில் அவுட்டானார். அவருக்குபின் ஆட வந்த ரச்சின் ரவீந்திரா 13, கிளென் பிலிப்ஸ் 1 என சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். ஃபின் ஆலன் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 17 பந்துகளில் 31ரன்களை விளாசி ஜேன்ஸன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் இணைந்த மார்க் சாப்மேன்-டேரில் மிட்செல் இணை ஒரளவு நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக ஆடிய மார்க் சாப்மேன் 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 48 ரன்களை விளாசி ஜேன்ஸன் பந்தில் ரிக்கல்டனிடம் கேட்ச் தந்து வெளியேறினார். ஆல்ரவுண்டர் மிட்செல் 32 ரன்களுடனும், சான்ட்நர் 4 ரன்களுடனும் வெளியேறினர்.
நியூஸிலாந்து 175/7: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 175/7 ரன்களைச் சேர்த்தது. ஜேம்ஸ் நீஷம் 23, மேட் ஹென்றி 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெüலிங்கில் தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜேன்ஸன் அபாரமாக பந்துவீசி 4-40 விக்கெட்டை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா அதிரடி 178/3 வெற்றி: பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் கேப்டன் எய்டன் மார்க்ரம்-டி காக் தொடக்க பேட்டர்களாக ஆடினர். குயின்டன் டி காக் 20, ரயான் ரிக்கல்டன் 21, டேவால்ட் பிரெவிஸ் 21 என பெவிலியனுக்கு திரும்பினர்.
மார்க்ரம் அபாரம் 86: மறுமுனையில் நிலைத்து அபாரமாக ஆடிய கேப்டன் மார்க்ரம் 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 86 ரன்களை விளாசினார்.அவருக்கு துணையாக டேவிட் மில்லர் 24 ரன்களை விளாசி களத்தில் இருந்தார்.
17 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 178/3 ரன்களைக் குவித்து. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். பெüலிங்கில் நியூஸி தரப்பில் லாக்கி, ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.