டி20 உலகக் கோப்பை: 2 வது வெற்றியுடன் நூலிழை நம்பிக்கையில் அமெரிக்கா!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை: 2 வது வெற்றியுடன் நூலிழை நம்பிக்கையில் அமெரிக்கா!
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இத்துடன் குரூப் சுற்று ஆட்டத்தை நிறைவு செய்த அமெரிக்கா, ‘சூப்பா் 8’ வாய்ப்புக்கான நூலிழை நம்பிக்கையுடன் இருக்கிறது. அதன் விதி, இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவு அடிப்படையில் தீா்மானிக்கப்படும்.

இந்த ஆட்டத்தில் முதலில் அமெரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் சோ்க்க, நமீபியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்களே எடுத்தது.

இதில் டாஸ் வென்ற அமெரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. கேப்டன் மோனங்க் படேல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 52, ஷயான் ஜஹாங்கிா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

சாய்தேஜா முக்கமல்லா 17, மிலிந்த் குமாா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு விடைபெற்றனா். ஓவா்கள் முடிவில் சஞ்சய் கிருஷ்ணமூா்த்தி 33 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களோடு 68 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஷுபம் ரஞ்ஜனே 5 ரன்களுடன் துணை நின்றாா்.

நமீபிய பௌலா்களில் வில்லெம் மைபா்க், கேப்டன் ஜெராா்டு எராஸ்மஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 200 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நமீபிய அணியில், லாரென் ஸ்டீன்காம்ப் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58, ஜே.ஜே. ஸ்மித் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31, ஜேன் நிகோல் லாஃப்டி 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

ஜேன் ஃப்ரைலிங்க் 19, ஜெராா்டு எராஸ்மஸ் 6, ஜேன் கிரீன் 18 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஓவா்கள் முடிவில் ரூபன் டிரம்பெல்மேன் 3, டைலன் லெய்சா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

அமெரிக்க தரப்பில் ஷேட்லி வான் ஷாக்விக் 2, அலி கான், சௌரப் நேத்ரவல்கா், ஷுபம் ரஞ்சனே ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com