டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்!
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 104 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் அதிரடியாக 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், களமிறங்கிய கேமரூன் கிரீன் 3 ரன்கள், டிம் டேவிட் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் போட்டியில் விளையாடும் கேப்டன் மிட்செல் மார்ஷ், 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின் களமிறங்கியவர்களில் ஜோஷ் இங்லிஷ் மற்றும் மேக்ஸ்வெல்லைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜோஷ் இங்லிஷ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் துஷான் ஹேமந்தா 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லாலகே மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
Summary
Australia, playing their match against Sri Lanka in the T20 World Cup, were bowled out for 181 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்கள்! வலுக்கும் கண்டனம்!!

மிட்செல் மார்ஷ் அபாரம்! ராஜஸ்தானுக்கு 221 ரன்கள் இலக்கு!

மிட்செல் மார்ஷ் சதம் விளாசல்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!

டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 166 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




