பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.

Published On :

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைத் தழுவியது.

ஜஸ்பிரித் பும்ரா சாதனை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இன்றையப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இந்திய வீரர்கள்

ஜஸ்பிரித் பும்ரா - 33 விக்கெட்டுகள்

அர்ஷ்தீப் சிங் - 32 விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 32 விக்கெட்டுகள்

ஹார்திக் பாண்டியா - 29 விக்கெட்டுகள்

ரவீந்திர ஜடேஜா - 22 விக்கெட்டுகள்

Summary

Indian fast bowler Jasprit Bumrah has broken the record for taking the most wickets in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.