முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு (40 வயது) மறுமணம் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தியாவின் தொடக்க வீரரான ஷிகர் தவான் இடது கை பேட்டராக மிகவும் புகழ்பெற்று விளங்கினார். ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.
முதல் மனைவியைப் பிரிந்த பிறகு, தற்போது தனது காதலி சோஃபியா ஷைனை மறுமணம் செய்துள்ளார்.
கடந்த மே.2025ல் தனது காதலை பொதுமக்களுக்கு ஷிகர் தவான் அறிவித்திருந்தார். கடந்த ஜன.2026ல் நிச்சயதார்த்தம் செய்த இவர்கள், பிப்.21ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.
கடந்த பிப்.20ஆம் தேதி ஷிகர் தவானும் சோபியாவும் ஹால்தியைக் கொண்டாடினார்கள்.
சோபியா ஐரிஷ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இருவரும் துபையில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஷிகர் தவான் தனது முதல் மனைவியான ஆஷா முகர்ஜியை கடந்த அக்.2023-ல் விவாகரத்து செய்தார். கடந்த 2011-ல் திருமணம் செய்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தார்கள்.
தனது மகனைப் பார்க்க முன்னாள் மனைவி அனுமதிப்பதில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
தில்லி உயர்நீதி மன்றத்திலும் இது குறித்து தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை ஷிகர் தவான் தெரிவித்திருந்தார்.
தற்போது, தனது காதலி சோஃபியா ஷைனை 40 வயதில் திருமணம் செய்துள்ளார்.
Participated in wedding of cricketer shikhar Dhawan. Wishing a happy married life to him.â¦@SDhawan25â© â¦@ImRo45â© â¦@IrfanPathanâ© pic.twitter.com/P3qHe2a9fe
— Rajeev Shukla (@ShuklaRajiv) February 21, 2026
Summary
Shikhar Dhawan marries girlfriend Sophie Shine in private ceremony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

39 வயதில் மெஸ்ஸி - ஜோகோவிச் அசத்தல்..! விம்பிள்டனின் சிறப்பு!

நூறு போில் ஒருவர்! மந்தனாவுக்குக் கிடைத்த மணிமகுடம்!

கோலிவுட் ஸ்டூடியோ!

'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



