பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேக்கு 255 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.

News image
ஹெட்மேயர் - ரோவ்மன் பௌவல்.- படம் | AP
Updated On :23 பிப்ரவரி 2026, 3:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்று வரும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் விளையாடியது.

ஷிம்ரன் ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி!

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங் மற்றும் கேப்டன் சாய் ஹோப் களமிறங்கினர். பிரண்டன் கிங் 9 ரன்களிலும், சாய் ஹோப் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஷிம்ரன் ஹெட்மேயர் மற்றும் ரோவ்மன் பௌவல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய இருவரும் மும்பை வான்கடே திடலில் சிக்ஸர் மழையைப் பொழிந்தனர். அதிரடியில் மிரட்டிய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். ஜிம்பாப்வே அணி கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதை பயன்படுத்திக் கொண்ட ஹெட்மேயர் அதிரடியாக ரன்கள் குவித்தார். அவர் 34 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய ரோவ்மன் பௌவல் 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 31* ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , ரோமாரியோ ஷெப்பர்டு 10 பந்துகளில் 21 ரன்களும் (3 சிக்ஸர்கள்) எடுத்தனர். ஜேசன் ஹோல்டர் 4 பந்துகளில் 13 ரன்கள் (2 சிக்ஸர்கள்) எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நிகரவா மற்றும் பிளெஸ்ஸிங் முஸராபானி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிராட் ஈவன்ஸ் மற்றும் கிரீம் கிரெமர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.