12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியிருப்பதாவது...

Sanjiv Goenka

சஞ்சீவ் கோயங்கா - படம்: எக்ஸ் / சஞ்சீவ் கோயங்கா.

Published On :

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனுக்காக புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது.

இந்தச் சின்னங்கள் எங்கள் நகரத்தின், மாநிலத்தின் உள்ளுணர்வை பிரதிபலிக்கும் என அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.

இது குறித்து சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது:

இன்று, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது. புதிய வடிவமைப்பு மட்டுமல்ல, புதிய தோற்றம்.

இந்தச் சின்னங்கள் எங்கள் நகரத்தின் மாநிலத்தின் உள்ளுணர்வை பிரதிபலிக்கும். தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு ரசிகர்களும் இந்த அணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்.

இந்தப் புதிய இலச்சினை கருடன், கிரீடம், யானை என்ற மூன்று வலுவான சின்னங்களை ஒன்றிணைத்து, அது லக்னௌ, உத்தரப் பிரதேசத்தை தனிப்பட்ட உணர்வில் கதையாகக் கூறுகிறது.

இந்தப் புதிய இலச்சினை எங்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. லக்னௌ, உத்தரப் பிரதேச மக்கள் இந்த அணியை முதல் நாளில் இருந்து வரவேற்றுள்ளார்கள்.

இந்தச் சின்னம் அன்பு, நம்பிக்கையின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

  • கருடன் என்பது எங்களது கனவை உயர்த்துவதைப் பிரதிபலிக்கிறது.

  • கிரீடம் என்பது களத்தில் ஒவ்வொரு முறையும் நாங்கள் பெருமையுடன் களமிறங்குவதைப் பிரதிபலிக்கிறது.

  • யானை என்பது இந்தப் பகுதியின் வலிமை, விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது.

இது அடையாளத்தை மாற்றுவதல்ல; இது எங்களது சத்தியம். இந்த நகரத்தை நாங்கள் பெருமைப்படுத்துவோம், எங்களது மண்ணை மதித்து, இதயத்துடன் வேலைச் செய்கிறோம் என்றார்.

Summary

What did Sanjiv Goenka say about the LSG new logo?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.