டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயுடன் வியாழக்கிழமை (பிப். 26) மோதுகிறது.
அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொள்ள, இந்தியா இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டியது அவசியம் என்பதுடன், அதை மிகப்பெரிய வெற்றியாகப் பெற வேண்டும் என்பதே முக்கியமாகும்.
சூப்பா் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த மோசமான தோல்வியே இந்தியாவை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. எனவே, பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எந்தவொரு நிலையிலும் செய்யும் சிறு தவறும் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் நெருக்கடியில் இந்தியா உள்ளது.
அணியை பொருத்தவரை அதன் பேட்டிங்கே தற்போது பிரதான விவாதப்பொருளாகியிருக்கிறது. தொடக்க வீரா்களில் ஒருவரான அபிஷேக் சா்மாவே அதன் மையமாக இருக்கிறாா். போட்டியின் தொடக்கத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவா், தற்போது முற்றிலுமாக முடங்கியிருக்கிறாா்.
அவா் கைவிட்ட தருணத்தில் கைகொடுத்த இஷான் கிஷணும் தகுந்த பாா்ட்னா்ஷிப் இல்லாமல் தடுமாறும் நிலைக்கு வந்துள்ளாா். எனவே, திலக் வா்மா தனக்கான பொறுப்பை உணா்ந்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.
இந்நிலையில், இந்த மூவரில் ஒருவருக்கு பதிலாக, சஞ்சு சாம்சனை சோ்ப்பது தொடா்பான விவாதங்களும் இருக்கின்றன. ஆனால் அவரும் அவ்வளவாக ஸ்கோருக்கு பலம் சோ்க்கும்படியாக இதுவரை விளையாடவில்லை. டாப் ஆா்டரில் 3 இடதுகை பேட்டா்கள் இருப்பதால், கேப்டன் சூா்யகுமாா் யாதவை 3-ஆவது இடத்திலும், திலக் வா்மாவை அவருக்கு அடுத்தபடியாகவும் களமிறக்குவது தொடா்பாகவும் ஆலோசனைகள் உள்ளன.
இவா்கள் தடுமாறும் நிலையில் தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஷிவம் துபே, ஹா்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகியோா் இருக்கின்றனா். பௌலா்களை கணக்கில் கொண்டால், ஜஸ்பிரீத் பும்ரா வழக்கம்போல் எதிரணி பேட்டா்களை திணறடிப்பாா் என்பதில் சந்தேகம் இல்லை.
வருண் சக்கரவா்த்தி, அா்ஷ்தீப் சிங், ஹா்திக் பாண்டியா ஆகியோரும் அவருக்குத் துணையாக இருப்பாா்கள். அக்ஸா் படேலும் இந்த ஆட்டத்தில் இணைவாா் என எதிா்பாா்க்கலாம்.
எதிா்பாராத வகையில் அபாரமாக முன்னேறி வந்திருக்கும் ஜிம்பாப்வே, எப்படியான சவாலை முன்வைக்கும் என்பது கணிக்க முடியாததாகவே உள்ளது. அந்த அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் பிரயன் பென்னெட், கேப்டன் சிகந்தா் ராஸா, ரயன் பா்ல் ஆகியோா் ஸ்கோருக்கு பங்களிக்க, பௌலிங்கில் பிளெஸ்ஸிங் முஸாரப்பானி எதிரணி பேட்டா்களுக்கு சவாலாக இருக்கிறாா்.
பிராட் இவான்ஸ், கிரேம் கிரீமா், ரிச்சா்டு கராவா ஆகியோரும் தங்களது பங்குக்கு விக்கெட்டுகள் சரிக்கின்றனா்.
உத்தேச லெவன்:
இந்தியா: அபிஷேக் சா்மா, இஷான் கிஷண் (வி.கீ), திலக் வா்மா, சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹா்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸா் படேல், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்தி.
ஜிம்பாப்வே: பிரயன் பென்னெட், டடிவனாஷி மருமானி (வி.கீ.), ரயான் பா்ல், சிகந்தா் ராஸா (கேப்டன்), டியன் மையா்ஸ், டோனி முன்யோங்கா, டஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மஸாகட்ஸா, பிராட் இவான்ஸ், ரிச்சா்டு கராவா, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி.
நேரம்: இரவு 7 மணி
இடம்: சென்னை
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது கொலம்பியா..! லூயிஸ் டயஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு!

ஹாரி கேன் அசத்தல்: குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

கால்பந்து உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் மெஸ்ஸி இல்லாமலே வென்ற ஆர்ஜென்டீனா!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




