

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் டெவால்டு பிரெவிஸ் மற்றும் ஷெர்ஃபானே ரூதர்போர்டு மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.
எம்ஐ கேப்டவுன் அணியும் பிரிடோரியஸ் கேபிடல்ஸ் அணியும் நேற்றிரவு மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பிரிடோரியஸ் கேபிடல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
15.3 ஓவர்களில் 134/ 5 ரன்கள் எடுத்திருந்தது. ஷாய் ஹோப் 4 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் டெவால்டு பிரெவிஸ் உடன் ஷெர்ஃபானே ரூதர்போர்டும் இணைந்தார்.
இருவரும் எதிரணியின் பந்துவீச்சை அடித்துத் துவைத்தார்கள். தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார்கள்.
கடைசி 4 ஓவர்களில் 84 ரன்கள் குவித்து 221 ரன்களை இலக்காக நிர்ணயித்தார்கள்.
அடுத்து ஆடிய எம்ஐ கேப்டவுன் 135க்கு ஆல் அவுட்டானது. பேட்டிங்கில் 47 பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷெர்ஃபானே ரூதர்போர்டு ஆட்ட நாயகன் விருது வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.