

டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
எஸ்ஏ20 போட்டியில் தனது அணியின் இக்காட்டான சூழ்நிலையில் இருந்து 71 ரன்கள் குவித்து முதல் வெற்றியைப் பெறச் செய்துள்ளார்.
எஸ்ஏ20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக டேவிட் மில்லர் பொறுப்பேற்று விளையாடுகிறார்.
முதல் போட்டியில் இந்த அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து எஸ்ஏ20 வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்தது.
தற்போது, இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணியுடன் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 149/10 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோர்டன் எர்மன் 47 ரன்கள் எடுத்தார்.
பார்ல் ராயல்ஸ் அணி அணியின் சார்பாக நொகோபானி மொகோனா 4, ஓட்நீல் பார்ட்மென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணி 18-1, 19-2, 30-3, 35-4 என 7 ஓவர்களில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் டேவிட் மில்லர் பொறுப்பாக விளையாடினார்.
12ஆவது ஓவரிலிருந்து அதிரடியாக விளையாட டேவிட் மில்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 38 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
பார்ல் ராயல்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது. டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
டி20 போட்டிகளில் மீண்டும் தனது ஃபார்மை மீட்டுள்ள மில்லர் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.