சிட்னி டெஸ்ட்டை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து.. 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு!

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத்துடன் இங்கிலாந்து அணி வீரர்கள்.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத்துடன் இங்கிலாந்து அணி வீரர்கள்.படம்: ஏபி
Updated on
1 min read

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அபார வெற்றிபெற்று தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்பர்னில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியிடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து அணி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று நிலையில், ஆஷஸ் தொடரை இழந்தபோதும், நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இந்த வெற்றி அந்த அணிக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியான பிங்க் டெஸ்ட், சிட்னி கிரிக்கெட் திடலில் நாளை மறுநாள் (ஜன. 4) துவங்குகிறது.

இந்த நிலையில், சிட்னி டெஸ்ட் தொடருக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் போட்டியில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் கஸ் அகிட்சனுக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் 5,468 நாள்களுக்குப் பிறகு மெல்பர்னில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு அதே உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி கடைசிப் போட்டியிலும் வெற்றிபெற முனைப்புக் காட்டி வருகிறது.

இங்கிலாந்து அணி விவரம்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங்.

Summary

England have named their 12-member team for the fifth Ashes Test at Sydney Cricket Ground. The management has included Bashir and Potts in the team for the final game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com