ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு!

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு அறிவித்திருப்பது பற்றி...
உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா ANI
Updated on
1 min read

உஸ்மான் கவாஜா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஃபார்ம் இன்றி தவித்து வரும் கவாஜா, 2025 ஆம் ஆண்டில் ஒரு அரைசதம், ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆஷல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கவாஜா, 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளான கவாஜா ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சிட்னியில் நடைபெறும் 5வது ஆஷல் டெஸ்ட் போட்டியே தனது கடைசிப் போட்டி என கவாஜா அறிவித்துள்ளார்.

யார் இந்த கவாஜா?

பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் முதல்முறையாக சிட்னி திடலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், அதே திடலில் ஓய்வுபெறவுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8,001 ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக கவாஜா பங்காற்றினார். இந்த காலகட்டத்தில் மட்டும் 17 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 7 அரைசதங்களுடன் 1,621 ரன்கள் குவித்தார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸா மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கடந்த 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கறுப்புச் சட்டை அணிந்து விளையாடியதால் சர்ச்சைக்கு உள்ளானார்.

Summary

Australian player Usman Khawaja retires!

உஸ்மான் கவாஜா
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்பாத முன்னாள் ஆஸி. வீரர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com