

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்காக இந்திய அணி வருகிற செப்டம்பரில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய அணி கடந்த ஆண்டு ஜூலையில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதாக இருந்தது. வங்கதேசத்தில் நிலவிய வன்முறை மற்றும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய அணியின் சுற்றுப்பயணம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்காக வருகிற செப்டம்பரில் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 1, 3 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும், டி20 போட்டிகள் செப்டம்பர் 9, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி செப்டம்பரில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளபோதிலும், பிசிசிஐ தரப்பில் இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.