ஒரே ஓவரில் 34 ரன்கள், முதல் சதமடித்த ஹார்திக் பாண்டியா..! விதர்பா அணிக்கு 294 ரன்கள் இலக்கு!

விஜய் ஹசாரே கோப்பையில் முதல் சதமடித்த ஹார்திக் பாண்டியா குறித்து...
Hardik Pandya
ஹார்திக் பாண்டியாபடம்: எக்ஸ் / ஹார்திக் பாண்டியா.
Updated on
1 min read

விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹார்திக் பாண்டியாவின் விடியோ வைரலாகி வருகிறது.

அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 68 பந்துகளில் தனது முதல் லிஸ்ட் ஏ சதம் அடித்து அசத்தினார்.

விஜய் ஹசாரே கோப்பையில் பரோடா அணியும் விதர்பா அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அணி 50 ஓவர்களில் 293/9 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டிய 62 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது, போட்டியின் 39-ஆவது ஓவரை பார்த் ரேகாடே வீசினார்.

இந்த ஓவரில் 5 சிக்ஸர்கள், 1 பவுன்டரி அடித்த ஹார்திக் 68 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.

பின்னர் 133 ரன்களில் ஹார்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். விதர்பா அணியில் யஷ் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Summary

A video of Hardik Pandya, who impressed by hitting 5 sixes in a single over in the Vijay Hazare Trophy, is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com