

ஐபிஎல் தொடரில் நீக்கப்பட்ட முஷதஃபிசூர் ரஹ்மானுக்கு ஆதரவாக அந்த நாட்டின் சட்ட ஆலோசகரும் எழுத்தாளருமான ஆசிஃப் நஸ்ருல், ”அடிமைத்தனத்துக்கான காலம் முடிந்துவிட்டது” எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் முஷதஃபிசூர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் எடுத்தது.
முஷ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கம்
வங்கதேசத்தில் இந்து மக்களின் மீது வன்முறை ஏற்படுவதால், முஸ்தஃபிசூர் ரஹ்மானை நீக்க இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்த நிலையில், பிசிசிஐ அவரை நீக்கும்படி கேகேஆர் அணிக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து முஷ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணி நீக்கியது.
ஆசிஃப் நஸ்ருல் ஒரு வங்கதேச எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், அரசியல் விமர்சகர் மற்றும் டாக்கா பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருக்கிறார்.
இவர் வங்கதேசத்தின் விளையாட்டுதுறைக்கான ஆலோசகராகவும் பொறுப்பேற்று வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பையில் என்ன பாதுகாப்பு?
தீவிர மத அமைப்புகளுக்கு தலைசாய்க்கும் வகையில், வங்கதேசத்தின் கிரிக்கெட் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை இந்திய கிரிக்கெட் சங்கம் கேகேஆர் அணியிலிருந்து நீக்கியுள்ளத்துக்கு எனது கடுமையான கண்டனத்தையும் போராட்டத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விளையாட்டுத் துறை அமைச்சருக்கான பொறுப்பில் இருக்கும் நான், இது குறித்து ஐசிசியிடம் முறையிட்டுள்ளேன்.
ஒரு வங்கதேச வீரருக்கு பாதுகாப்பு இல்லையெனில் ஒட்டுமொத்த அணிக்கும் டி20 உலகக் கோப்பையில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
அதனால், உலகக் கோப்பை போட்டிகளை இலங்கையில் நடத்தும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
அடிமைத்தனத்துக்கான காலம் முடிந்துவிட்டது
ஐபிஎல் போட்டிகளையும் வங்கதேசத்தில் ஒளிபரப்ப கூடாதென கோரிக்கை வைத்துள்ளேன்.
எந்த சூழ்நிலையிலும் வங்கதேச கிரிக்கெட்டர், வீரர்கள் அல்லது வங்கதேசமும் அவமானத்தை ஏற்க விடமாட்டோம். அடிமைத்தனத்துக்கான காலம் முடிந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
7 ஆல் ரவுண்டர்கள் உடன் லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டது. வங்கதேசத்துக்கான மூன்று போட்டிகள் கொல்கத்தாவிலும் 1 போட்டி மும்பையிலும் நடைபெற இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.