

விஜய் ஹசாரே கோப்பையில் அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு சிஎஸ்கே அணி சிறப்புப் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கேவின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே கோப்பையில் அவரது சொந்த மாநில அணிக்கு விளையாடி வருகிறார்.
விஜய் ஹசாரே கோப்பையில் குறைந்த போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், விஜய் ஹசாரே கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார்.
குறைவான போட்டிகளிலேயே இந்தச் சாதனைகளை ருதுராஜ் நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜ் தேர்வாகாமல் இருக்கிறார். அஸ்வினும் இவருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.
சிஎஸ்கே அணி அவரைக் கௌரவிக்கும் பொருட்டு சிறப்புப் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.