

சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த அரைசதத்துடன் ஜோ ரூட் சச்சின் சாதனைக்கு மிக அருகில் சென்றுள்ளார். அடுத்த போட்டியில் சமன்செய்ய வாய்ப்பு இருக்கிறது.
கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 211/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஜோ ரூட் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
இது ஜோ ரூட்டின் 67-ஆவது அரைசதமாகும். சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார்.
டெஸ்ட்டில் அதிக அரைசதங்கள்
1. சச்சின் டெண்டுல்கர் - 68
2. ஜோ ரூட் - 67
3. ஷிவ்நரைன் சந்திரபால் - 66
4. ராகுல் திராவிட்/ ஆலன் பார்டர் - 63
5. ரிக்கி பாண்டிங் - 62
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.