

வலது கை பேட்டரான நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் தற்போது இடது கை பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி செய்து வருகிறார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சுழல்பந்துகளைச் சமாளிக்க இப்படியான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7ஆம் தேதி முதல் மார்ச்.8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் சூப்பர் ஸ்மாஷ் கிளாஸ் போட்டியில் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 90 ரன்கள் எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்து அணி ஒருநாள், டி20 தொடரில் விளையாட இந்தியாவுக்கு வருகிறது.
இதில் முதலில் 3 ஒருநாள் போட்டிகளிலும் அடுத்ததாக 5 டி20 போட்டிகளிலும் விளையாடுகின்றன
இந்நிலையில், இஎஸ்பிஎன் கிரிகின்போவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இடது கை பேட்டிங் பயிற்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிறைய காரணங்களுக்காக இதைச் செய்கிறேன். அதில் ஒன்று - இரண்டு கைகள், இரண்டு பக்க மூளைகள் வளர்ச்சிக்காகச் செய்கிறே.
அதேசமயம் ஒரு கட்டத்தில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களைச் சந்திக்கும்படி சூழ்நிலை வரும்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பெரும்பாலும் துணைக் கண்டத்தில் நடைபெறுவதால் ஆடுகளம் சுழல்பந்துக்கு சாதகமாக இருக்கும்.
அடுத்த ஒருநாள், டி20 தொடருக்கான பிட்சை நன்றாக தயார் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.