

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரின் தொடர் நாயகன் விருது வென்றார்.
காம்டன் - மில்லர் எனப்படும் இந்த விருதினை மிட்செல் ஸ்டார்க் முதல் முறையாக வென்றுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பான இங்கிலாந்தின் டேனிஸ் காம்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் கெயித் மில்லர் இருவரின் பெயரையும் இணைத்து ஆஷஸ் தொடரின் தொடர் நாயகன் விருது 2005 முதல் வழங்கப்படுகிறது.
ஆஷஸ் 2025-26 தொடரினை ஆஸ்திரேலியா 4- 1 என வென்றது. இந்தத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 156 ரன்கள் எடுத்து அணிக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
இதன்மூலம், தொடரில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் ஸ்டார்க்கிற்கு முதல்முறையாக காம்டன் - மில்லர் விருது வழங்கப்பட்டது.
இதுவரை காம்டன் - மில்லர் விருது வென்றவர்கள்...
2025 - 26 : மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)
2021-22 : டிராவிஸ் ஹெட் (ஆஸி.)
2017–18 : ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.)
2015 : ஜோ ரூட் (இங்கிலாந்து)
2013–14 : மிட்செல் ஜான்சன் (ஆஸி.)
2005 : ஆண்ட்ரூ ப்ளின்டாஃப் (இங்கிலாந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.