

விஜய் ஹசாரே கோப்பை
அபிஷேக் சர்மா விஜய் ஹசாரே கோப்பையில் வீசிய ஒரு ஓவரில் சர்ஃபராஸ் கான் 30 ரன்கள் விளாசினார்.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி அளித்தது.
விஜய் ஹசாரே கோப்பையில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 45.1 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரமன்தீப் சிங் 72 ரன்கள் அடித்தார்.
அடுத்து விளையாடிய மும்பை அணி 26.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா வீசியா ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசி 15 பந்தில் அரைசதம் அடித்தார்.
சர்ஃபராஸ் கான் 20 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.