

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக மற்றுமொரு விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
வதோராவில் விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்திற்கு வலைப் பயிற்சியில் பேடிங்கின்போது, வலது பக்கவாட்டு வயிற்றுத் தசைகளில் வலி ஏற்பட்டது.
பின்னர், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. பிசிசிஐ மருத்துவக் குழு அனைத்து சோதனைகளையும் சோதித்துப் பார்த்தது. பின்னர், ரிஷப் பந்திற்கு பக்கவாட்டு வயிற்றுத் தசைகளில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அதனால், அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி: சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.