இன்று 4-ஆவது டி20: இந்தியா - நியூஸி. மோதல்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது.
இன்று 4-ஆவது டி20: இந்தியா - நியூஸி. மோதல்
Updated on
1 min read

விசாகப்பட்டினம், ஜன. 27: இந்தியா - நியூஸிலாந்து மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது.

முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, 4-ஆவது வெற்றிக்கான முனைப்புடன் இருக்கிறது. மறுபுறம் நியூஸிலாந்து, தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முயற்சியில் உள்ளது.

இந்தத் தொடரைப் பொருத்தவரை, இந்திய ஸ்பின்னர்கள் இதுவரை சோபிக்கவில்லை. 4-ஆவது ஆட்டத்துக்காக வருண் சக்கரவர்த்தியை மீண்டும் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் ஒரு ஸ்பின்னர் வாய்ப்பு ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவின் 3 வெற்றிகளிலுமே பேட்டர்களான அபிஷேக் சர்மா, இஷான் கிஷண், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். சஞ்சு சாம்சன் தடுமாறி வரும் நிலையில், அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது திலக் வர்மா பரிசீலிக்கப்படுவாரா என்ற கேள்வி உள்ளது.

மறுபுறம், ஒருநாள் தொடரில் அபாரமாகச் செயல்பட்ட நியூஸிலாந்து அணி, டி20 தொடரில் முற்றிலுமாகத் தடுமாறி வருகிறது.

அதன் பேட்டர்கள் அவ்வப்போது அணிக்கு கை கொடுத்தபோதும், பெüலர்கள் இந்தியாவுக்கு சவால் அளிக்க முடியாமல் திணறுகின்றனர். பேட்டிங்கில் டேரில் மிட்செலும், பெüலிங்கில் ஜேக்கப் டஃபியும் நம்பகமாக உள்ளனர்.

நேரம்: இரவு 7 மணி

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com