சென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

England team players

இங்கிலாந்து அணி வீரர்கள் - படம் | AP

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 13) அறிவித்துள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு தொடர்களிலும் இங்கிலாந்து அணியை ஹாரி ப்ரூக் கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவரும் மீண்டும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். இளம் வீரர்களான தாமஸ் ரியூ மற்றும் எடி ஜாக் இருவரும் அறிமுக வீரர்களாக டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோர்டான் காக்ஸ், ஹென்றி க்ரோகோம்ப், சாம் கரண், லியம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜோஷ் டங்.

டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

ஹாரி ப்ரூக் (கேப்டன்), டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஹென்றி க்ரோகோம்ப், சாம் கரண், லியம் டாஸன், அனூரின் டொனால்டு, எடி ஜாக், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், தாமஸ் ரியூ, பில் சால்ட், லூக் வுட்.

Summary

The England cricket board announced today the squad for the ODI and T20 series against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.