அதிவேக இரட்டைச் சதம் விளாசி ஹாரி ப்ரூக் சாதனை; இலங்கைக்கு இமாலய இலக்கு!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் அதிவேக இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இரட்டைச் சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஹாரி ப்ரூக் - படம் | AP
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் அதிவேக இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.
அதிவேக இரட்டைச் சதம் விளாசிய ஹாரி ப்ரூக்!
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிரடியில் மிரட்டிய கேப்டன் ஹாரி ப்ரூக் அதிவேக இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். அவர் 114 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். சிக்ஸர் மழையைப் பொழிந்த ஹாரி ப்ரூக் 116 பந்துகளில் 202 ரன்கள் எடுத்தார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 117 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசியதே அதிவேகமான இரட்டைச் சதமாக இருந்தது. தற்போது, ஹாரி ப்ரூக் அதனை முறியடித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்கைத் தொடர்ந்து, ஜோ ரூட் 69 ரன்கள், வில் ஜாக்ஸ் 66 ரன்கள், டாம் பாண்டன் 50 ரன்கள், பென் டக்கெட் 29 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே இரண்டு விக்கெட்டுகளையும், அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் ஜனித் லியாநாகே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
Summary
England captain Harry Brook has set a record by hitting the fastest double century in a tri-series ODI against Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


