இன்றிரவு 11.30 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெறவுள்ள இரு ஆட்டங்களையும் கால்பந்து ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
ஆர்ஜென்டீனா vs நைஜீரியா
குரோஷியா vs ஐஸ்லாந்து
உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது.
இந்நிலையில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. எதிர்பார்த்ததை விடவும் குரோஷிய வீரர்கள் அமர்க்களமாக விளையாடினார்கள். 53-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் வில்லியின் தவறால் ஆண்டே ரெபிக் முதல் கோலை அடித்தார். கடைசிக் கட்டத்தில் லுகாவும் இவானும் மேலும் கோல்கள் அடித்து ஆர்ஜென்டீனா, மெஸ்ஸி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்கள். இதனால் குரோஷிய அணி 3-0 என்கிற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது. குரோஷியா இரு அட்டகாசமான வெற்றிகளால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1998-க்குப் பிறகு இப்போதுதான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுகிறது. துணிச்சலான வீரர்களைக் கொண்ட இந்த அணி மேலும் பல அதிர்ச்சிகளை அளிக்கும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
| நாடு | ஆட்டம் | வெற்றி | தோல்வி | டிரா | கோல் வித்தியாசம் | புள்ளிகள் |
| குரோஷியா | 2 | 2 | 0 | 0 | 5 | 6 |
| நைஜீரியா | 2 | 1 | 1 | 0 | 0 | 3 |
| ஐஸ்லாந்து | 2 | 0 | 1 | 1 | -2 | 1 |
| ஆர்ஜென்டீனா | 2 | 0 | 1 | 1 | -3 | 1 |
ஐஸ்லாந்துடன் டிரா, குரோஷியாவுடன் தோல்வி அடைந்த ஆர்ஜென்டீனா வெறும் 1 புள்ளியோடு உள்ளது. உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக இன்று நடைபெறவுள்ள நைஜீரியாவுடனான ஆட்டம் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனாவுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா கட்டாயம் வெல்ல வேண்டும். அதே நேரத்தில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணி தோல்வியடைய வேண்டும். நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. ஐஸ்லாந்தும், ஆர்ஜென்டீனாவும் தலா 1 புள்ளியுடன் உள்ளன. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு ஆர்ஜென்டீனா அணி முன்னேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் எனக் கருதப்படுகிறது. உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் கனவோடு வந்த மெஸ்ஸியின்
ஆர்ஜென்டீனா அணி துவக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் டிரா செய்தது. மெஸ்ஸி அந்த ஆட்டத்தில் பெனால்டி கிக் வாய்ப்பையும் தவறவிட்டார். குரோஷியாவோடு நடந்த ஆட்டத்தில் 3-0 என படுதோல்வி அடைந்தது. மேலும் மெஸ்ஸியின் ஆட்டமும் மெச்சும்படியாக இல்லை. கடந்த 2014-இல் இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஆர்ஜென்டீனா தற்போது துவக்க ஆட்டங்களிலேயே தடுமாறி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா எனத் தெரியவில்லை. தனது அணி சோபிக்கத் தவறியதால், இந்த உலகக் கோப்பையோடு ஓய்வு பெற மெஸ்ஸி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2016-இல் ஏற்கெனவே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அவர் பின்னர் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
குரோஷிய அணியில் முக்கியமான 6 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஓய்வு தரப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டாம் நிலை வீரர்கள் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படுவர். அதில் குரோஷியா தோல்வியடைந்தால் ஆர்ஜென்டீனாவின் நிலை சிக்கலாகிவிடும். எனினும் கோல் சராசரி அடிப்படையில் ஆர்ஜென்டீனாவுக்கு வாய்ப்புள்ளது.
ஆர்ஜென்டீனா நாக் அவுட்டுக்குத் தகுதி பெறும்
* நைஜீரியாவைத் தோற்கடித்தால், அதேசமயம் ஐஸ்லாந்து, குரோஷியுடன் தோற்கவேண்டும்.
* ஆர்ஜென்டீனா, ஐஸ்லாந்து ஆகிய இரு அணிகளும் வென்றால் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அந்நிலையில் கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா தகுதி பெற
வாய்ப்புண்டு. அதாவது ஐஸ்லாந்து வெல்கிற பட்சத்தில் ஆர்ஜென்டீனா அணி, நைஜீரியாவுக்கு எதிராக 2 கோல்கள் அதிகமாக அடித்திருக்கவேண்டும்.
ஆர்ஜென்டீனா வெளியேறிவிடும்
* நைஜீரியாவுடன் தோற்றுவிட்டால்.
* நைஜீரியாவுடனான ஆட்டம் சமனில் முடிந்தால்.
* ஆர்ஜென்டீனா, ஐஸ்லாந்து ஆகிய இரு அணிகளும் வென்றால் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அந்நிலையில் கோல்கள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தால் வெளியேற
வாய்ப்புண்டு.
* கோல்கள் வித்தியாசத்திலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், பிறகு நன்னடத்தைப் புள்ளிகளைக் கொண்டு மதிப்பிடப்படும். எனில் ஆர்ஜென்டீனா நிச்சயம் வெளியேறிவிடும். இதுவரை அந்த அணி 3 மஞ்சள் அட்டையைப் பெற்றுள்ளார்கள். ஆனால், ஐஸ்லாந்து அணி ஒன்றுகூட பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


