புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகளின் முழுப்பட்டியலும் அட்டவணையும்!

நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று தொடங்குகிறது. அதன் அட்டவணை...

News image
Updated On :29 ஜூன் 2018, 5:12 am

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. இதையடுத்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

முதல் சுற்றுகளில்...

குரூப் ஏ பிரிவில் உருகுவே, ரஷிய அணிகள் தகுதி பெற, சவுதி அரேபியா, எகிப்து அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் தகுதி பெற, ஈரான், மொராக்கோ அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் சி பிரிவில் ஃபிரான்ஸ், டென்மார்க் அணிகள் தகுதி பெற, பெரு, ஆஸ்திரேலிய அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் டி பிரிவில் குரோஸியா, ஆர்ஜென்டீனா அணிகள் தகுதி பெற, நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் இ பிரிவில் பிரேஸில், ஸ்விட்சர்லாந்து அணிகள் தகுதி பெற, செர்பியா, கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் எஃப் பிரிவில் ஸ்வீடன், மெக்ஸிகோ அணிகள் தகுதி பெற, கொரியா, ஜெர்மனி அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் தகுதி பெற, துனிசியா, பனாமா அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் ஹெச் பிரிவில் கொலம்பியா, ஜப்பான் அணிகள் தகுதி பெற, செனகல், போலந்து அணிகள் வெளியேறியுள்ளன.


இன்று ஓய்வு நாள். நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று தொடங்குகிறது. அதன் அட்டவணை:

காலிறுதிக்கு முந்தைய சுற்று

ஜூன் 30 

பிரான்சு vs ஆர்ஜென்டீனா (இந்திய நேரம் இரவு 7.30 மணி)
போர்ச்சுகல் vs உருகுவே (இரவு 11.30 மணி)

ஜூலை 1

ஸ்பெயின் vs ரஷியா (இரவு 7.30 மணி)
குரோஷியா vs டென்மார்க் (இரவு 11.30 மணி)

ஜூலை 2

பிரேஸில் vs மெக்ஸிகோ (இரவு 7.30 மணி)
பெல்ஜியம் vs ஜப்பான் (இரவு 11.30 மணி)

ஜூலை 3

ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து (இரவு 7.30 மணி)
கொலம்பியா vs இங்கிலாந்து (இரவு 11.30 மணி)

இதன்பிறகு காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 6 முதல் தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.