ஆர்சிபி அணியை இனிமேலும் விமரிசித்தால்...: நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்!

நான் என்ன சொன்னேன் என்பது நினைவில்லை. ஆனால் அதற்காகக் கொலை மிரட்டலா?
ஆர்சிபி அணியை இனிமேலும் விமரிசித்தால்...: நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்!
Published on
Updated on
1 min read

இந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடும் விதத்தைப் பார்த்தால் எல்லோருக்கும் ஆத்திரமாகத்தான் வருகிறது. ஆனால் ஆர்சிபி அணியை விமரிசித்த நியூஸிலாந்து கிரிக்கெட் நிபுணர் மற்றும் முன்னாள் வீரரான சைமன் டோல் மீது ஆத்திரத்துடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ரசிகர் ஒருவர்.

இதுவரை விளையாடிய நான்கு  ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது ஆர்சிபி அணி. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி ரசிகர் ஒருவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சைமன் டோல் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் ஸ்கீரின்ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ஆர்சிபி அணியை மேலும் விமரிசித்தால் நீங்கள் கொல்லப்படுவது உறுதி என்று ஒரு ரசிகர் சைமன் டோலுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

நான் என்ன சொன்னேன் என்பது நினைவில்லை. ஆனால் அதற்காகக் கொலை மிரட்டலா? இது ஒரு கிரிக்கெட் ஆட்டம் மட்டும்தான், இயல்பாக இருங்கள் என்று ரசிகருக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் டோல். 

சைமன் டோல் நியூஸிலாந்து அணிக்காக 32 டெஸ்டுகளிலும் 42 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com