
24 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ கெல்லியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
காயத்தால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள ஆன்ரிச் நார்ட்ஜுக்குப் பதிலாக கெல்லி தேர்வாகியுள்ளார். காயத்திலிருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யாராவது மீண்டு வரவில்லையென்றால் கெல்லியை உலகக் கோப்பைக்குக்கூட தேர்வு செய்யலாம் என மார்க் வாஹ் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய டி20 ஆட்டங்களில் இறுதி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுபவர் என்கிற அடையாளம் உள்ளதால் கெல்லி கேகேஆர் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
சனிக்கிழமை தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெல்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.