ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள்: பலன் பெறாத அணிகளும் ஆச்சர்யத் தகவல்களும்!

அந்த முதல் நாள் அதிரடி சதத்துக்குப் பிறகு இன்றுவரை கேகேஆர் அணியால் ஒரு சதம் கூட எடுக்கமுடியவில்லை...
ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள்: பலன் பெறாத அணிகளும் ஆச்சர்யத் தகவல்களும்!
Published on
Updated on
1 min read

டி20 ஆட்டத்தில் சதமடிப்பது என்பது உண்மையிலேயே மெச்சத்தகுந்த செயல்.

120 பந்துகளில் ஒரு வீரருக்கு அதிகபட்சம் 60 பந்துகள் கிடைத்தாலே அது ஆச்சர்யம்தான். எனினும் ஐபிஎல் போட்டியில் இதுவரை 52 சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் தொகுப்பு:

அதிக ஐபிஎல் சதங்கள் எடுத்துள்ள அணிகள்

12 பெங்களூர் 
10 பஞ்சாப்  
8 தில்லி  
8 சென்னை  
4 மும்பை  
4 ராஜஸ்தான்  
2 டெக்கான் சார்ஜர்ஸ்  
2 புனே சூப்பர்ஜெயண்ட்  
1 கொல்கத்தா  
1 சன்ரைசர்ஸ்  

மொத்த சதங்கள் : 52 ( இதில் 42 சதங்கள் வெற்றிக்குக் காரணமாகியுள்ளன.)

* மொத்தமுள்ள 52 சதங்களில் 30 சதங்களை பெங்களூர், பஞ்சாப், தில்லி ஆகிய அணிகள் இணைந்து எடுத்துள்ளன. அதாவது 58%. எனினும் இந்த மூன்று அணிகளும் ஐபிஎல் கோப்பையை இதுவரை வென்றதில்லை!

* பெங்களூரின் 12 சதங்களில் கெய்ல் 5 சதங்களும் கோலி 4 சதங்களும் எடுத்துள்ளார்கள். 

* ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே கேகேஆர் வீரர் மெக்கல்லம் 158 ரன்கள் எடுத்தார். ஆனால் அதுவே அந்த அணியின் ஒரே ஐபிஎல் சதமாகும். அந்த முதல் நாள் அதிரடி சதத்துக்குப் பிறகு இன்றுவரை கேகேஆர் அணியால் ஒரு சதம் கூட எடுக்கமுடியவில்லை. 

* கடந்த வருடம் சிஎஸ்கேவின் ஷேன் வாட்சன் இரு சதங்கள் எடுத்தார். ரிஷப் பந்த், அம்பட்டி ராயுடு, கிறிஸ் கெயில் ஆகியோரும் கடந்த வருடம் சதமடித்தார்கள். 

ஐபிஎல்: அதிக சதங்கள்

கிறிஸ் கெயில் - 6
விராட் கோலி - 4
ஷேன் வாட்சன் - 4
டேவிட் வார்னர் - 3
டி வில்லியர்ஸ் - 3

* ஐபிஎல் போட்டியில் இதுவரை 32 வீரர்கள் சதமடித்துள்ளார்கள். அவர்களில் 14 இந்திய வீரர்கள், 18 வெளிநாட்டு வீரர்கள். 

அதிவேக சதங்கள்

கிறிஸ் கெயில் - 30 பந்துகள் (புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக, 2013)
யூசுப் பதான் - 37 பதங்கள் (மும்பை அணிக்கு எதிராக, 2010)
டேவிட் மில்லர் - 38 பந்துகள் (ஆர்சிபிக்கு எதிராக, 2013)

* ஐபிஎல் சதங்களில் அதிகப் பந்துகளை எடுத்துக்கொண்டவர், ஆர்சிபியின் மனீஷ் பாண்டே. 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக. மேலும், ஐபிஎல் போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்கிற பெயரை அவர் பெற்றார்.

* 2016 ஐபிஎல் போட்டியில், அந்த ஒரு சீசனில் மட்டுமே 4 சதங்கள் எடுத்து அசத்தினார் விராட் கோலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com