ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சிஎஸ்கேவை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம்: தோனி

சென்னை சூப்பர் கிங்ஸை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 நவம்பர் 2020, 5:05 pm

DIN


சென்னை சூப்பர் கிங்ஸை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளுடன் நிறைவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாதது இதுவே முதன்முறை. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் சென்னை அணி கிங்ஸ் லெவன் பஞ்சாபை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன்பிறகு, பரிசளிப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு தோனி பதிலளித்ததாவது:

"இது கடினமான சீசன். நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம். நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணியதுதான் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்கள். 

7, 8 ஆட்டங்களில் பின்தங்கியிருக்கும்போது அது மிகவும் கடினமானது. கிரிக்கெட்டை அனுபவிக்காத ஓய்வறையில் இருப்பதை விரும்ப முடியாது. அது எளிதானதல்ல. அதனால், வீரர்கள் விளையாடியதை எண்ணி பெருமையாக உள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு, அணியின் முக்கிய வீரர்களில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். வீரர்கள் ஏலம் குறித்து பிசிசிஐ எடுக்கும் முடிவைச் சார்ந்துதான் நிறைய இருக்கிறது. ஐபிஎல் தொடக்கத்தின்போது, நாங்கள் உருவாக்கிய அணி 10 ஆண்டுகளுக்கு செயல்பட்டுள்ளது. தற்போது அணியை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

நாங்கள் அடுத்த வருடம் வலிமையுடன் திரும்ப வருவோம். அதுதான் எங்களது அடையாளம்.

ருதுராஜ் பேட்டிங் செய்வதைப் பார்க்கும் போதெல்லாம், வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக செயல்படுவார். ஆனால், ஆட்டங்களின்போது அதைப் பார்க்க முடியவில்லை. அதன்பிறகு, அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 20 நாள்கள் ஆன பிறகும் அவர் முழு உடற்தகுதியடையவில்லை. எங்களிடம் மதிப்பீட்டைப் பெறுவதற்கான நேரம் அவருக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து பாப் டு பிளெஸ்ஸி மற்றும் ஷேன் வாட்சனுடன் களமிறங்கியதற்கு இதுவொரு முக்கியக் காரணம். அது சிறப்பாக அமையவில்லை. ஆனால், அனுபவ வீரர்களுடன் களமிறங்க வேண்டிய சூழல்தான் அது."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.