ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து கெயில் ஓய்வு?

​ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து டி20 ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றுவிட்டதாக தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

News image
கோப்புப்படம்
Updated On :2 நவம்பர் 2020, 3:03 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து டி20 ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றுவிட்டதாக தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் கிறிஸ் கெயில். பஞ்சாப் அணி நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பைத் தவறவிட்டு லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில், கிறிஸ் கெயில் ஐபில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் குறித்து கெயில் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"என்னுடைய சீசன் முடிவுக்கு வந்தாலும், தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டைப் பாருங்கள். நன்றி."

நடப்பு சீசன் முடிவுக்கு வந்ததையே கெயில் சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கெயில் ஓய்வு பெற்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் தவறானத் தகவல்கள் பரவி வருகின்றன.

அண்மையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு மந்தீப் சிங் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் உரையாடினர். அப்போது, ஒருபோதும் ஓய்வுபெறக் கூடாது என கெயிலிடம் மந்தீப் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த கெயில், "ஓய்வை ரத்து செய்யுங்கள், இப்போதைக்கு ஓய்வு முடிவு வரப்போவதில்லை" என்றார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் 7 ஆட்டங்களில் விளையாடாத கெயில், கடைசி 7 ஆட்டங்களில் களமிறங்கினார். அதில் 3 அரைசதங்கள் உள்பட 288 ரன்கள் எடுத்தார். பேட்டிங் சராசரி: 41.14, ஸ்டிரைக் ரேட்: 137.14. இவருடைய வருகை பஞ்சாபுக்கு 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் அனைத்து ரக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.