ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நோர்க்கியா, ரபாடா 5 விக்கெட்டுகள்: தில்லிக்கு 153 ரன்கள் இலக்கு

​தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 3:41 pm

DIN


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் முக்கியமான லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஷ் பிலிப்பி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். பிலிப்பி சரியான டைமிங் கிடைக்காமல் திணறல் ஆட்டத்தில் ரன் எடுத்து விளையாடினார். இந்த நிலையில், 5-வது ஓவரில் ககிசோ ரபாடாவை அறிமுகப்படுத்தினார் கேப்டன் ஷ்ரேயஸ். முதல் பந்திலேயே பிலிப்பி 12 ரன்களுக்கு (17 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, படிக்கல்லுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். ரன் ரேட் பெரிதளவு உயராமல் 7-க்கு கீழ் இருந்து வந்தது. இந்த பாட்னர்ஷிப் அதிரடிக்கு மாற வேண்டிய தருணத்தில் கோலி 29 ரன்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடி வந்த படிக்கல், இந்த சீசனின் 5-வது அரைசதத்தை எட்டினார்.

Story image

கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் பெங்களூரு இருந்தது. இந்த நிலையில், அன்ரிச் நோர்க்கியா வீசிய 16-வது ஓவரில் படிக்கல் (50 ரன்கள்), கிறிஸ் மாரிஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

எனினும் 17-வது ஓவரை ரபாடா சிறப்பாக வீச 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து, சாம்ஸ் வீசிய 18-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 1 பவுண்டரி, ஷிவம் துபே 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க 17 ரன்கள் கிடைத்தன. ரபாடா வீசிய 19-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 1 சிக்ஸரும், துபே 1 பவுண்டரி அடிக்க 11 ரன்கள் கிடைத்தது. ஆனால், கடைசி பந்தில் துபே (17 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரை வீச நோர்க்கியா வந்தார். 2-வது பந்தில் 2-வது ரன்னை எடுக்க முயன்ற டி வில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதனால், கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.