ஐபிஎல்: யார் அந்த சூப்பர் ஓவர் ரசிகை?

இந்த ஆட்டத்தின்போது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
படம் - ட்விட்டர்
படம் - ட்விட்டர்
Published on
Updated on
2 min read

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 ஆட்டத்தில் மைதானத்தில் அமர்ந்திருந்து கவனம் ஈர்த்த ரசிகையைப் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சூப்பா் ஓவா் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆக, 2-வது சூப்பா் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.

சூப்பா் ஓவா்: வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் ரன்கள் இன்றியும் வீழ்ந்தனா். தீபக் ஹூடா 1 ரன் சோ்த்தாா்.

எனினும் மும்பையும் 1 விக்கெட் இழப்புக்கு 5 ரன் சோ்த்து சமன் செய்தது. டி காக் 3 ரன் சோ்த்து ஆட்டமிழக்க, ரோஹித் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது சூப்பா் ஓவரில் முதலில் ஆடிய மும்பை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன் சோ்த்தது. இதில் ஹாா்திக் பாண்டியா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கிரன் பொல்லாா்ட் 8 ரன்கள் சோ்த்தாா். 2 உபரிகள் கிடைத்தன.

பின்னா் ஆடிய பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து வென்றது. கிறிஸ் கெயில் ஒரு சிக்ஸா் உள்பட 7 ரன், மயங்க் அகா்வால் 2 பவுண்டரிகள் விளாசி 8 ரன் சோ்த்தனா்.

இந்த ஆட்டத்தின்போது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். ஆட்டத்தின் பரபரப்பான தருணங்களில் வெவ்வேறு விதமான முகபாவங்களை வெளிப்படுத்தினார். கேமரா அவரை அடிக்கடி காண்பித்ததால் அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். 

துபை மைதானத்தில் இருந்த அந்த ரசிகை, ரியானா லால்வானி எனத் தெரிய வந்துள்ளது. துபையில் பள்ளிப் படிப்பைப் பயின்றவர், லண்டனில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். பஞ்சாப் அணியின் ரசிகையான ரியானா, சூப்பர் ஓவரின்போது வெளிப்படுத்திய முகபாவங்களால் திடீர் புகழை அடைந்துள்ளார். இதனால் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், தட் சூப்பர் ஓவர் கேர்ள் எனத் தன்னைப் பற்றி சுயவிவரக் குறிப்பை எழுதியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com