
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 59.
ஆஸ்திரேலிய அணிக்காக 52 டெஸ்டுகள், 164 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிப் பிரபலம் அடைந்தவர் டீன் ஜோன்ஸ். டெஸ்டில் 11 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் அடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி வர்ணனைக்காக மும்பைக்கு வந்திருந்த டீன் ஜோன்ஸ் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். இந்திய ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான டீன் ஜோன்ஸின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீன் ஜோன்ஸின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.