இந்தியப் பயணிகள் விமானங்களுக்குத் தடை: ஐபிஎல்-லில் விளையாடும் ஆஸி. வீரர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவது பற்றி ஆஸி. பிரதமர்

இந்தியப் பயணிகள் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால்...
இந்தியப் பயணிகள் விமானங்களுக்குத் தடை: ஐபிஎல்-லில் விளையாடும் ஆஸி. வீரர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவது பற்றி ஆஸி. பிரதமர்

இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் தங்கள் நாட்டை தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. மே 15 வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியப் பயணிகள் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள், தங்களுடைய சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய வீரர்கள் தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்குச் சென்றுள்ளார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணம் அல்ல இது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாடு திரும்பும்போது சொந்த ஏற்பாட்டில் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். ஐபிஎல் போட்டி முடிந்தபிறகு ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தனி விமானத்தை அனுப்ப வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் மே 23 அன்று முடிகிறது. ஐபிஎல் போட்டி மே 30 அன்று நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com