171 ரன்கள்: ஐபிஎல்-லில் கடந்த மூன்று நாள்களாக முதலில் பேட்டிங் செய்த அணிகள் எடுத்த ஸ்கோர்!

கடந்த மூன்று நாள்களாக ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 171 என்கிற....
ராஜஸ்தான் வீரர் ஜெயிஸ்வால்
ராஜஸ்தான் வீரர் ஜெயிஸ்வால்
Updated on
1 min read

கடந்த மூன்று நாள்களாக ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 171 என்கிற ஒரேமாதிரியான ஸ்கோரை எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளன.

கடந்த செவ்வாய் அன்று ஆமதாபாத்தில் ஆர்சிபி - தில்லி அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 171 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய தில்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நேற்று தில்லியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸும் மோதின. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தில்லியில் இன்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு அதே 171 ரன்களை எடுத்துள்ளது.

ஒரேமாதிரியான ஸ்கோரை தொடர்ச்சியாக 3 அணிகளும் எடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சயப்படுத்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com