ஒட்டுமொத்த கொல்கத்தா அணிக்கும் அபராதம் விதித்த ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஒட்டுமொத்த கொல்கத்தா அணிக்கும் அபராதம் விதித்த ஐபிஎல்
Published on
Updated on
1 min read

20 ஓவர்களை வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் கொல்கத்தா அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. டி காக் 55 ரன்கள் எடுத்தார்.  சுழற்பந்துவீச்சாளர்களான வருணும் நரைனும் அற்புதமாகப் பந்துவீசி மும்பை அணி அதிக ரன்கள் எடுக்கவிடாமல் செய்தார்கள்.  அடுத்து ஆடிய கொல்கத்தா 15.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்து வென்றது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் எடுத்தார்கள். 

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. மும்பை அணி 6-வது இடத்துக்கு இறங்கியுள்ளது.

நேற்று, மும்பை அணி நீண்ட நேரம் பேட்டிங் செய்வது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 20 ஓவர்களை முடிக்க கொல்கத்தா அணி நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதுதான் அதற்குக் காரணம். விளைவு, ஒட்டு மொத்த அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா கேப்டன் மார்கனுக்கு ரூ. 24 லட்சமும் அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 6 லட்சமும் (அல்லது ஆட்ட ஊதியத்திலிருந்து 25% இதில் எது குறைவான தொகையோ) அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com