ருதுராஜ் சதம் வீண்: சென்னையை வென்றது ராஜஸ்தான்

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ருதுராஜ் சதம் வீண்: சென்னையை வென்றது ராஜஸ்தான்
ருதுராஜ் சதம் வீண்: சென்னையை வென்றது ராஜஸ்தான்

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

அபுதாபியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் விளாசியது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடித்து வென்றது.

சென்னை இன்னிங்ஸில், இந்த சீசனில் சிறப்பாக ஆடி வரும் ருதுராஜ் அபாரமாக சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். வழக்கமாக சொதப்பும் ராஜஸ்தான் பேட்டிங் வரிசை இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 190 ரன்களை சேஸ் செய்தது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, சென்னை இன்னிங்ஸை ருதுராஜ் - டூ பிளெஸ்ஸிஸ் தொடங்கினா். இதில் டூ பிளெஸ்ஸிஸ் 25 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 3, மொயீன் அலி 21, அம்பட்டி ராயுடு 2 ரன்கள் சோ்த்து வெளியேறினா்.

தொடக்க வீரரான ருதுராஜ் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸா் விளாசி சதமடித்தாா். ஓவா்கள் முடிவில் ருதுராஜ் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 101, ஜடேஜா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் ராகுல் தெவாதியா 3, சேத்தன் சகாரியா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ராஜஸ்தானில் தொடக்க வீரா் எவின் லீவிஸ் 27 ரன்கள் அடிக்க, உடன் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்கள் அடித்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 28 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஷிவம் துபே - கிளென் பிலிப்ஸ் கூட்டணியால் ராஜஸ்தான் வென்றது.

ஷிவம் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64, கிளென் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் ஷா்துல் 2, ஆசிஃப் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com