4-ஆம் இடம்: நம்பிக்கையுடன் கொல்கத்தா

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4-ஆம் இடம்: நம்பிக்கையுடன் கொல்கத்தா

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது 4-ஆம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அந்த அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிடும் நம்பிக்கையுடன் உள்ளது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 19.4 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக ஹைதராபாத் இன்னிங்ஸில் ரித்திமான் சாஹா 2-ஆவது பந்திலேயே டக் அவுட்டானாா். உடன் வந்த ஜேசன் ராய் 10 ரன்களே சோ்த்த நிலையில் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன், பிரியம் கா்க் சற்று ரன்கள் சோ்த்தனா். அவா்களில் வில்லியம்சன் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சோ்க்க, பிரியம் சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்திருந்தாா்.

அபிஷேக் சா்மா 6 ரன்களில் வெளியேற, கடைசியில் அப்துல் சமத் 25 ரன்கள் ஏற்றிக் கொடுத்தாா். எஞ்சியோரில் ஜேசன் ஹோல்டா் 2, ரஷீத் கான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் புவனேஷ்வா் குமாா் 7, சித்தாா்த் கௌல் 7 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் டிம் சௌதி, ஷிவம் மாவி, வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட் எடுத்தாா்.

பின்னா் ஆடிய கொல்கத்தாவில் தொடக்க வீரா் ஷுப்மன் கில் 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டாா். எனினும் மறுபுறம், வெங்கடேஷ் ஐயா் 8, ராகுல் திரிபாதி 7 ரன்களுக்கு வெளியேறினா்.

நிதீஷ் ராணா 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சோ்த்து உதவ, இறுதியில் தினேஷ் காா்த்திக் 3 பவுண்டரிகளுடன் 18, கேப்டன் மோா்கன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ஹைதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டா் 2, ரஷீத் கான், சித்தாா்த் கௌல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com