கொல்கத்தாவுக்கு மிரட்டல் தொடக்கம்: இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா டெல்லி?

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2-வில் 136 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தாவுக்கு கில், வெங்கடேஷ் சிறப்பான தொடக்கம் தந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் 136 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கம் தந்துள்ளனர்.

ஐபிஎல் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.

136 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். அன்ரிச் நோர்க்கியா வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கைத் தொடக்கினார் கில்.

இதன்பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் பவுண்டரி, அக்ஷர் படேல் மற்றும் ககிசோ ரபாடா ஓவரில் தலா 1 சிக்ஸர் அடிக்க ரன் ரேட் ஓவருக்கு 8-ஐத் தாண்டியது.

ஆவேஷ் கான் வீசிய பவர் பிளேவின்  கடைசி ஓவரிலும் 1 பவுண்டரி கிடைக்க, 6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com